ǸԹ

Skip to main content
வழிகாட்டுதல்

அறிமுகம் மற்றும் சுருக்கமான உயிரோவியம் (Tamil)

புதுப்பிக்கப்பட்டது 3 ஜூன் 2026

Applies to England

கர்ப்பத்தின்போதும் உங்கள் குழந்தை பிறந்த பின்னரும் வழங்கப்படும் ஆய்வுச் சோதனையை இந்தச் சுருக்கமான உயிரோவியம் காட்டுகின்றது.

இந்த உயிரோவியம் துணைத் தலைப்புகள் மற்றும் பிரித்தானிய சைகை மொழி என்பவற்றிலும் கிடைக்கின்றது. துணைத் தலைப்புகள் போடப்பட்ட பிரதிகளில் அடங்குபவை ஆங்கிலம், மற்றும் அரபிக், பெங்காலி, சீன, பிரென்சு, லட்வியன், லித்துவேனியன், போலந்து, போர்த்துக்கல், பஞசாபி, றோமேனியன், சோமாலி, மற்றும் உருது ஆகியவற்றின் மொழிபெயர்ப்புகள்.

ஆய்வுச் சோதனைகள்

ஒரு நோய் நிலைமையைப் பெறுவதற்கான உயர்வான வாய்ப்புள்ள மக்களைக் கண்டுகொள்வதற்காக ஆய்வுச் சோதனைகள் பயன்படுத்தப்படுகின்றன. இதனுடைய கருத்து, அவர்கள் அதிகளவில் ஆரம்பத்தில், சாத்தியமான அதிகளவில் பலனுள்ள சிகிச்சையைப் பெற்றுக்கொள்ள முடியும், அல்லது அவர்களது ஆரோக்கியம் குறித்து அவர்கள் அறிவுமிக்க தீர்மானங்களைச் செய்ய முடியும். ஒரு வடிகட்டி ஊடாக மக்களைப் போடுதல் போன்றது ஆய்வுச் சோதனை எனக் கற்பனை செய்வது உதவியாக இருக்கலாம். பெரும்பாலான மக்கள் வடிகட்டி ஊடாக நேரடியாகவே சென்றுவிடுகிறார்கள், ஆனால் ஒரு சிறிய எண்ணிக்கையில் உள்ளோர் வடிகட்டியுள் பிடிபடுகிறார்கள். வடிகட்டியில் பிடிபடும் மக்களே ஆரோக்கி நிலைமை குறித்து ஆய்வுச் சோதனை செய்யப்படுவதற்கான ஒரு உயர்ந்த வாய்ப்புள்ளவர்களாகக் கருதப்படுகிறார்கள்.

ஆய்வுச் சோதனைகள் குறைபாடு அற்றவையல்ல. உண்மையில் ஒரு நிலைமை அவர்களுக்கு இல்லாதபோது, அந்த நோய் நிலைமையைப் பெறுவதற்கான உயர்வான வாய்ப்பு அவர்களுக்கு அல்லது அவர்களின் குழந்தைக்கு உள்ளது எனச் சிலருக்குச் சொல்லப்படும் (பொய்யான நேர்மறை). மேலும், உண்மைமயில் ஒரு நோய் நிலைமை அவர்களுக்கு உள்ளபோது, அந்த நோய் நிலைமையை அவர்கள் அல்லது அவர்களது குழந்தை பெறுவதற்கான ஒரு வாய்ப்பு குறைவானது எனச் சிலருக்குச் சொல்லப்படும் (பொய்யான எதிர்மறை).

ஆய்வுச் சோதனையிலும் தகவல் கூட்டங்களிலும் பங்குகொள்வதற்குப் பங்காளர்கள் வரவேற்கப்படுகிறார்கள்.

ஆய்வுச் சோதனைகளுக்கும் நோயறிதல் சோதனைகளுக்கும் இடையிலான வேறுபாடு

ஒரு ஆரோக்கிய நிலைமையைப் பெற்றுக்கொள்வதற்கான ஒரு உயர்வான அல்லது குறைவான வாய்ப்பு உங்களுக்கு அல்லது உங்கள் குழந்தைக்கு இருந்தால், ஆய்வுச் சோதனையால் அதைக் கண்டுகொள்ள முடியும். ஆனால், வழமையாக அதனை நிச்சயமாக அது உங்களுக்குச் சொல்ல முடியாது. ஆகையால், ஒரு நிலைமையைப் பெறுவதற்கான ஒரு உயர்வான வாய்ப்பு உள்ளவர்கள் எனக் காணப்படும் மக்களுக்கு வேறு விதமான சோதனை வழங்கப்படும். இது ஒரு நோய் கண்டறிதல் சோதனை என அழைக்கப்படுகின்றது. அது அதிகளவில் நிச்சயமான “ஆம்” அல்லது “இல்லை” என்ற பதிலைக் கொடுக்கின்றது.

கர்ப்பத்தின்போதும் கர்ப்பத்தின் பின்னரும் ஆய்வுச் சோதனைகள்

உங்களுக்கு அல்லது உங்கள் பிள்ளைக்கு இருக்கக்கூடிய ஏதாவது ஆரோக்கிய நிலைமைகளைக் கண்டுகொள்வதற்காக, கர்ப்பத்தின்போது ஆய்வுச் சோதனைகள் கொடுக்கப்படுகின்றன. இந்தச் சோதனைகள்- அல்ட்றாசவுண்ட் ஆய்வுகள், இரத்த சோதனைகள், மற்றும் ஒரு வினாக்கொத்து- கர்ப்பத்தின்போதும் உங்கள் பிள்ளை பிறந்த பின்னரும் பராமரிப்பு அல்லது சிகிச்சை தொடர்பான தீர்மானங்களைச் செய்வதற்கு உங்களுக்கு உதவுகின்றன.

புதிதாகப் பிறந்த குழந்தைக்கான ஆய்வுச் சோதனைகள் உங்கள் குழந்தை பிறந்ததும் விரைவில் அவருக்குக் கொடுக்கப்படுகின்றன. தேவைப்பட்டால், முடிந்தளவு விரைவில் பொருத்தமான சிகிச்சை உங்கள் பிள்ளைக்குக் கொடுக்கப்படுவதற்காக, நாங்கள் இவற்றை வழங்குகின்றோம்.

சில நடைமுறைகள்

உங்களுக்கு, உங்கள் குழந்தையின் தந்தைக்கு, அல்லது ஒரு குடும்ப உறுப்பினருக்கு ஏற்கனவே ஒரு ஆரோக்கிய நிலைமை இருந்தால், தயவுசெய்து உங்கள் மருத்துவச்சிக்குச் சொல்லவும். எந்த ஒரு ஆய்வுச் சோதனையின் முடிவுகளுக்காகவும் காதிருக்கும்போது நீங்கள் வீடு மாறினால், உங்கள் புதிய முகவரியை உங்கள் மருத்துவச்சிக்கு அல்லது ஹெல்த் விசிட்டருக்குத் தயவுசெய்து சொல்லவும்.

ஆய்வுச் சோதனை உங்கள் தெரிவாகும்

ஒவ்வொரு சோதனையையும் பெற்றுக்கொள்வதா இல்லையா என்பது உங்கள் தனிப்பட்ட தீர்மானமாகும், மற்றும் அதனை நீங்கள் மாத்திரமே செய்ய முடியும். உங்களுக்குக் கொடுக்கப்படும் ஒவ்வொரு சோதனை குறித்தும் ஆரோாக்கிய தொழிலறிஞர்களுடன் நீங்கள் கலந்துரையாட முடியும், மற்றும் உங்கள் தனிப்பட்ட சூழ்நிலைகளின் அடிப்படையில் அது உங்களுக்குச் சரியானதா இல்லையா என நீங்கள் தீர்மானிக்க முடியும். எந்தக் கட்டத்திலும் நீங்கள் உங்கள் மனதை மாற்றிக்கொள்ளவும் முடியும்.

இங்கே விபரிக்கப்படும் ஆய்வுச் சோதனைகளில் சில, உதாரணமாக தொற்று நோய்களுக்கான இரத்த சோதனைகள், உங்களுக்குச் சர்க்கரை வியாதி இருந்தால் கண் ஆய்வுச் சோதனை, மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தைக்கான சரிபார்ப்புகள் என்பன என்எச்எஸ் என்பதால் பரிந்துரைக்கப்படுகின்றன. இதற்கான காரணம், இந்தச் சோதனைகள் மூலமான முடிவுகள் பாரதூரமான நோய் நிலைமைகளுக்காக நீங்கள் அல்லது உங்கள் குழந்தை அவசரமான சிகிச்சையைப் பெறுகிறார் எனப் பார்த்துக்கொள்வதற்கு உதவலாம்.

அரிவாள் உயிரணு நோய் மற்றும் மரபணு சார்ந்த இரத்த நோய், டவுண்ஸ் சின்ட்றொம், எட்வார்ட்ஸ் சின்ட்றொம், படோஸ் சின்ட்றொம் தொடர்பான கர்ப்பத்தின்போதுள்ள ஆய்வுச் சோதனைகள் மற்றும் 20-வார ஆய்வுச் சோதனை என்பன மிகவும் தனிப்பட்ட தீர்மானங்கள் எடுக்கப்படுவதற்கு வழிவகுக்கலாம். இவற்றில் அடங்குபவை:

  • கருச்சிதைவு ஏற்படுவதற்கான சாத்தியத்துடன் ஒரு நோய் கண்டறிதல் சோதனையைப் பெற்றுக்கொள்வதா இல்லையா
  • உங்கள் கர்ப்பத்தைத் தொடர்ந்து வைத்திருப்பதா அல்லது முடித்துக்கொள்வதா

இந்த ஆய்வுச் சோதனைகளை வைத்திருப்பதா இல்லையா என்பது பற்றிக் கவனமான முறையில் சிந்திப்பது முக்கியமானது. உங்கள் தீர்மானங்களுக்கு மதிப்பளிக்கப்படும் மற்றும் ஆரோக்கிய பராமரிப்பு தொழிலறிஞர்கள் உங்களுக்கு ஆதரவளிப்பார்கள். உங்கள் தீர்மானங்களுக்கு மதிப்பளிக்கப்படவில்லை என நீங்கள் உணர்ந்தால், அது பற்றி நீங்கள் உரத்துப் பேச வேண்டும்.

மேலதிக ஆதரவு

இந்தத் தகவலில் உள்ள நோய் நிலைமைகளில் எது பற்றியும் ஆதரவு வழங்கக்கூடிய அமைப்புக்கள் பற்றிய விபரங்கக்கு,  என்பதைப் பார்க்கவும்.

ஆய்வுச் சோதனை மற்றும் என்எச்எஸ்

எந்த ஆய்வுச் சோதனைகளைக் கொடுப்பது என நல்ல சான்றின் அடிப்படையில் என்எச்எஸ் தீர்மானிக்கின்றது. யூகே தேசிய ஆய்வுச் சோதனை கமிட்டி (UK National Screening Committee - UK NSC) என அழைக்கப்படும் ஒரு நிபுணர் குழு என்எச்எஸ் என்பதற்கு அறிவுரை வழங்குகின்றது. என்எச்எஸ் என்பதால் வழங்கப்படும் ஆய்வுச் சோதனைகள் அனைத்தும் இலவசமானவை. சில தனியார் கம்பனிகளும் ஆய்வுச் சோதனைகளை வழங்குகின்றன. அவற்றுக்கு நீங்கள் பணம் கொடுக்க வேண்டியுள்ளது. தனியார் ஆய்வுச் சோதனையின் தரத்துக்கு என்எச்எஸ் உத்தரவாதமளிக்க முடியாது. தனியார் ஆய்வுச் சோதனை குறித்து அதிகளவிலான அறிவுரையைப் பெற்றுக்கொள்ளவும்.

ரகசியத்தன்ம໾

சரியான நேரத்தில் ஆய்வுச் சோதனைக்காக உங்களை அழைப்பதற்காக, உங்கள் என்எச்எஸ் பதிவேடுகளிலிருந்து தனிப்பட்ட தகவலை என்எச்எஸ் ஆய்வுச் சோதனை நிகழ்ச்சித் திட்டங்கள் என்பது பயன்படுத்துகின்றது. மேலும், உயர்ந்த தரமான பராமரிப்பை நீங்கள் பெறுகிறீர்கள் எனப் பார்த்துக்கொள்வதற்கும் ஆய்வுச் சோதனை நிகழ்ச்சித் திட்டங்களை மேம்படுத்தவும் என்எச்எஸ் இங்கிலண்ட் உங்கள் தகவலைப் பயன்படுத்துகின்றது.  உங்கள் தகவல் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றது மற்றும் பாதுகாக்கப்படுகின்றது எனவும் உங்களுக்குள்ள மாற்று வழிகள் எவை எனவும் அதிகளவில் கண்டுகொள்ளவும்.

உங்களை அல்லது உங்கள் பிள்ளையை ஆய்வுச் சோதனைக்கு அழைப்பதற்காக, ஆய்வுச் சோதனை சேவைகளை வழங்குவோர் மற்றும் என்எச்எஸ் இங்கிலண்ட் என்போர் உங்கள் ஆரோாக்கிய பதிவேட்டில் வைத்திருக்கப்படும் தகவலை (தனிப்பட்ட தகவல்) பயன்படுத்துகிறார்கள்.

மேலும், ஆய்வுச் சோதனைச் சேவைகள் பாதுகாப்பாக, பலனுள்ளதாக இருப்பதற்காகவும் ஆதரவளிக்கவும் அவற்றுக்காக ஏற்படுத்தப்பட்ட உயர்ந்தளவிலான தரங்களைப் பேணவும் என்எச்எஸ் இங்கிலண்ட் உங்கள் தகவலைப் பயன்படுத்துகின்றது. முடியுமானவிடத்து, பெயர் குறிப்பிடப்படாத முறையில் நாங்கள் தகவலைப் பயன்படுத்துகின்றோம். உங்களை அல்லது உங்கள் பிள்ளையை அடையாளப்படுத்தக்கூடிய தகவலை நாங்கள் ஒருபோதும் வெளியிடமாட்டோம்.

யூகே பொதுவான தரவு பாதுகாத்தல் விதி (UK General Data Protection Regulation - UK GDPR) என்பதால் உங்கள் தனிப்பட்ட தகவலைப் பயன்படுத்தல் நிர்வகிக்கப்படுகின்றது. தகவல் பாதுகாப்பு சட்டத்தின் கீழ், உங்கள் தகவல் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றது என்பது தொடர்பான உரிமைகள் உங்களுக்கு உள்ளது. ( ‘ஆய்வுச் சோதனை நிகழ்ச்சித் திட்டங்கள் மற்றும் உங்கள் உரிமைகள்’ எனப்பட்ட பகுதியைப் பார்க்கவும்)

என்எச்எஸ் இங்கிலண்ட் என்பதும் ஆய்வுச் சோதனை வழங்குவோரும் தகவல் கட்டுப்படுத்துவோராக இருக்கிறார்கள். ஆய்வுச் சோதனைகளை வழங்கும் நோக்கங்களுக்காகத் தனிப்பட்ட தகவலைப் பயன்படுத்தல் தொடர்பாக பொறுப்புள்ளவர்களாக அவர்கள் இருக்கிறார்கள். பாதுகாப்பு மற்றும் தரம் உத்தரவாதம் தொடர்பான நோக்கங்களுக்காக என்எச்எஸ் இங்கிலண்ட் தகவல் கட்டுப்பாடளராக இருக்கிறது.

ஆய்வுச் சோதனை அல்லது கர்ப்ப கால நோய் கண்டறிதல் (PND) சோதனைகள் உங்கள் குழந்தைக்குச் சில நோய் நிலைமைகள் உள்ளன எனத் தெரிவித்தால், நாங்கள் அந்தத் தகவலை பாதுகாப்பான  (NCARDRS) என்பதற்குக் கொடுப்போம்.

இது அரிதான நோய் நிலைமைகளுடன் பிறந்த பிள்ளைகளின் ஒரு பாதுகாப்பான தேசிய பதிவேடாகும். அது ஆய்வுச் சோதனையை மேம்படுத்துவதற்கும் இந்த மருத்துவ நிலைமையைத் தடுப்பதற்கும் அல்லது அதற்குச் சிகிச்சை அளிப்பதற்கும் எங்களுக்கு உதவுகின்றது.

என்எச்எஸ் இங்கிலண்ட் என்பது உங்கள் அல்லது உங்கள் பிள்ளையின் தனிப்பட்ட தகவலை தேசிய நோய் பதிவேடுகளுடன் பகிர்ந்துகொள்கிறது. இந்தத் தகவலைப் பயன்படுத்தல் எவ்வளவு நன்றாக ஆய்வுச் சோதனை நிகழ்ச்சித் திட்டங்கள் செயற்படுகின்றன என அதிகளவில் புரிந்துகொள்வதற்கு எங்களுக்கு உதவுகின்றது.

உங்கள் பிள்ளை பற்றிய தகவல் பதிவேடுகளில் சேர்த்துக்கொள்ளப்படுவதிலிருந்தும் விலகுவதற்கு நீங்கள் விரும்பினால், உங்களுக்குச் சரியானதான ஒரு தீர்மானத்தை நீங்கள் செய்கிறீர்கள் எனப் பார்த்துக்கொள்வதற்காக, தயவுசெய்து உங்கள் ஆரோக்கிய பராமரிப்பு தொழிலறிஞருடன் கலந்துரையாடவும்.

மேலும், உங்கள் அல்லது உங்கள் பிள்ளையின் தனிப்பட்ட தகவலை என்எச்எஸ் இங்கிலண்ட் என்பதற்கு வெளியிலுள்ள ஆய்வுச் சோதனையை மேம்படுத்த விரும்பும் ஆராய்சிசியாளர்களுடனும் நாங்கள் பகிர்ந்துகொள்ளக்கூடும். இது கண்டிப்பான ஒப்புதல்கள் மற்றும் பாதுகாப்புகள் என்பவற்றுடன் மாத்திரம் நடைபெறும்.

உங்கள் தகவல் சேர்த்துக்கொள்ளப்படாமல் இருப்பதற்காக, ஆராய்ச்சி எதுவும் தொடர்பாகவும் முன்கூட்டியே திட்டமிடுவது தொடர்பாகவும் உங்கள் தகவல் பயன்படுத்தப்படுவதிலிருந்தும் நீங்கள் விலகிக்கொள்ள முடியும். உங்களுக்குச் சரியானதான ஒரு தீர்மானத்தை நீங்கள் செய்கிறீர்கள் எனப் பார்த்துக்கொள்வதற்காக, தயவுசெய்து உங்கள் ஆரோக்கிய பராமரிப்பு தொழிலறிஞருடன் கலந்துரையாடவும்.